search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை போலீசார்"

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    நீலகிரி:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 
     
    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.



    விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.

    இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.



    விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டபடி, பிணைத் தொகை செலுத்தவில்லை. எனவே, இன்று மாலைக்குள் பிணைத் தொகையை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயான், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்தனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தனர்.

    இதனையடுத்து கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.   

    இந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.   சர்ச்சை வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.#KodanadEstate #KodanadVideo
    கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தனிப்படை போலீசார், அதில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறது. #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார். 

    பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்தனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்திருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் வெளியிட்டுள்ளார். #KodanadEstate #KodanadVideo
    குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தனிப்படைகள் அமைத்து இருந்தார். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி, திருவட்டார், மணவாளக்குறிச்சி, அருமனை ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வரும், அருமனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 தலைமறைவு குற்றவாளிகளையும், மண வாளக்குறிச்சி பகுதியில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
    திருப்பூரில் தம்பதியை கொலை செய்து விட்டு ஆந்திர கல்குவாரியில் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி பாளையம் நாச்சிபாளையம் நத்தக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). விவசாயி. இவரது மனைவி தெய்வாத்தாள் (65). தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

    முத்துசாமியும் அவரது மனைவி தெய்வாத்தாளும் 28.12.2 017 - அன்று அவர்களது வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த நகை- பணத்திற்காக கொலை நடந்திருப்பது தெரியவந்தது. நீண்ட நாட்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்து துப்புக்கிடைக்கவில்லை.

    இதனையடுத்து கொலையாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டார். இதனையடுத்து 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுயம்புலிங்கம், சித்திரைராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை பிடிக்க போலீசார் தூத்துக்குடிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அங்குள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் சுயம்புலிங்கம், சித்திரைராஜா ஆகியோர் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்வது தெரியவந்தது.

    இதனையடுத்து குண்டூர் சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    விசாரணையில் சித்திரை ராஜா கொலையான முத்துசாமி, தெய்வாத்தாள் ஆகியோரது வீட்டருகே தங்கியிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் நகை மற்றும் பணப்புழக்கம் அதிகம் இருந்ததை தெரிந்து கொண்டார்.

    தனியே வசிக்கும் வயதான தம்பதியை கொன்று நகை- பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

    அதன்படி தூத்துக்குடியில் உள்ள அவரது கூட்டாளி சுயம்பு லிங்கத்துக்கு இது குறித்து தெரிவித்து அவரை அவினாசிபாளையம் வரவழைத்தார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் முத்துசாமி மற்றும் தெய்வாத்தாளை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு 6 பவுன் நகை, அரை பவுன் மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் எதுவும் தெரியாமல் ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

    கைதான சுயம்புலிங்கத்திற்கு தூத்துக்குடியில் 2 கொலை வழக்கும், காஞ்சிபுரத்தில் 2 கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை- பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையாளிகளை கண்டு பிடித்த தனிப்படை போலீசரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.

    அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஊட்டியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (35). திருப்பூர் 28-வது வார்டு அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்தார். சின்ன பொம்ம நாயக்கன் பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் இரு சக்கர வாகனம் வாங்க பைனான்ஸ் செய்தும் வந்தார். நேற்று முன்தினம் மாலை இளங்கோ தனது நண்பர் காளியப்பன் என்பவரை அழைத்து கொண்டு திரு நீலகண்டபுரம் வடக்கு பகுதிக்கு சென்றார்.

    அங்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக 3 பேரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் இளங்கோவும், காளியப்பனும் தனித் தனி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர்.

    அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திருநீலகண்டபுரம் மகாகாளியம்மன் கோவில் அருகே இளங்கோவையும், காளியப்பனையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டது.இதில் காளியப்பன் லேசான காயம் அடைந்தார். இளங்கோ பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலே இளங்கோ பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிச்சையா விசாரணை நடத்தி வந்தார். அப்போது இளங்கோவை கொலை செய்தது திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த கோபி, தாமோதரன், செந்தமிழன் என்பது தெரியவந்தது. இவர்களில் கோபி, செந்தமிழன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தாமோதரன் தப்பி ஓடி விட்டார்.

    அவரை பிடிக்க வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தாமோதரன் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் ஊட்டி விரைந்துள்ளது.

    தாமோதரன் போலீசில் சிக்கினால் தான் அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறினார்கள்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர் கொலையில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியமான பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாபு கன்னிபொயில் (வயது 45). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    இவர் கடந்த 7-ந்தேதி மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய தனிப்படையும் அமைத்தனர்.

    இந்த நிலையில் இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர் பாபுகன்னி பொயிலை கொலை செய்த மாகி பந்தக்கால் பகுதியை சேர்ந்த சரத், வடக்கு பள்ளூர் பகுதியை சேர்ந்த நிதேஸ் மற்றும் கேரள மாநிலம் பன்னூரை சேர்ந்த ஜெரிசுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

    ×